சிங்காநல்லூர் சார் -பதிவாளர்கள்உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு.

கோவை செப்டம்பர் 13 கோவைஅருகே உள்ள வெள்ளலூரில் சிங்காநல்லூர்சார் – பதிவாளர் (சப்-ரிஜிஸ்ட்ரார்) அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. எனவே போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன் தினம் அங்கு சென்றனர் .அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அது போன்று பொதுமக்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பீரோ ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சார் பதிவாளர் அருகே இருந்த பீரோவில் கணக்கில் வராத ரூ 1 லட்சத்து 34 ஆயிரம் அங்கிருந்த புரோக்கர்களிடம் ரூ.51 ஆயிரம் இருந்தது. உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் மொத்தம் ரூ.1,95 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் எப்படி வந்தது? அதற்கு கணக்கு என்ன? கணக்கில் வராத பணம் ஏன்இங்கு வைக்கப்பட்டிருக்கிறது? .என்பது உட்பட பல்வேறு கேள்விகளை கேட்டனர் ஆனால் அதற்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தப்பட்டது இதைத் தொடர்ந்து சார்பதிவாளர்கள் ரகோத்தமன், ஜெசிந்தா.தற்காலிக ஊழியர் ரவிச்சந்திரன் இடைத்தரகர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.