தாயாருக்கு போன் செய்துவிட்டு பயிற்சி நர்ஸ் திடீர் மாயம்

கோவை செப்டம்பர் 13 கேரள மாநிலம் கொல்லம் பக்கம் உள்ள கருநாக பள்ளியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் .இவரது மகள் ஈஷா (வயது 23) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படித்து வந்தார்.அங்குள்ள விடுதியில்தங்கி உள்ளார் .இவர் கடந்த 11 .ஆம் தேதி தனது தாயார் சிஜாவுக்குசெல்போனில் நான் ஒருவருடன் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டாராம்.பிறகு அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தாயார் சீஜா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.