கோவையில் அடுத்த மாதம் 4, 5, – ந்தேதிகளில் விஜய் பிரசாரம்.

அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த. வெ.க .மனு.கோவை செப்டம்பர் 17 தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழக வெற்றி கழகதலைவர் விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்ய உள்ளார். அந்த வகையில் அவர் அடுத்த மாதம் 4 மற்றும் 5 – ந் தேதிகளில் கோவையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரசசாரத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுக்க த.வெ.க. நிர்வாகிகள் மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் குமார் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தனர். அவர்கள் துணை கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கோவையில் அடுத்த மாதம் ( அக்டோபர் ) 4 – மற்றும் 5 – ந் தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். எனவே கோவையில் உள்ள சிவானந்த காலனி, ராஜூ நாயுடு வீதி, டாட்டாபாத் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் அவர் மக்களை சந்திக்க உள்ளார் .எனவே ஒலிபெருக்கி மற்றும் அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது