குடும்பம் நடத்த வர மறுத்த மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்த கணவர் கைது

கோவை செப்டம்பர் 17 கோவை செல்வபுரம் கல்லா மேடு, தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுமையா ( வயது 29) கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் நேற்று குனியமுத்தூர் குறிஞ்சி நகரில் உள்ள மனைவி சுமையா வீட்டுக்கு சென்றார். அவரை குடும்ப நடத்த வருமாறு அழைத்தார். அவர் மறுத்ததால் அவரை இரும்பு கம்பிய காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சுமையா குனியமுத்தூர் போலீ சில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் வழக்கு பதிவு செய்து கணவர் சுரேஷைநேற்று மாலை கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்