இம்முகாமினை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் பிந்து தொடங்கி வைத்தார் இதில் பத்துக்கு மேற்பட்ட சோலார் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டனர் இதில் ஒரு கிலோ வாட் முதல் 3 கிலோ வரை சோலார் இணைப்புக்கு மானியங்கள் அரசாங்கம் மூலம் வழங்கப்படுகிறது. சோலார் மூலம் மின் கட்டண சேமிப்பு மின் துண்டிப்பு குறைப்பு போன்ற பயன்களை மின் பணியாளர்கள் பொது மக்களுக்கு விளக்கி கூறினார். இம்முகாமில் உதவி செயற்பொறியாளர்முருகேஷ், உதவி பொறியாளர்கள் சரவணன், காதர் இப்ராஹிம், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரதம மந்திரியின் சூரியவீடு மின்சார திட்டம் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர் 400 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மானியத்தோடு கிடைக்கக்கூடிய இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும் சூலூர் உட்கோட்ட மின் பகிர்மான கழகத்தின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0