கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை மண்டல் சார்பாக மண்டல் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆனைமலை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் அதிமுக தொழிற்சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீது கலந்து கொண்டு மண்டல் அலுவலகத்திலிருந்து அனைவரும் ஊர்வலமாகச் சென்று வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது அதைத்தொடர்ந்து மதியம் பொதுமக்களுக்கு இனிப்புடன் சைவ பிரியாணி வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாஜகவின் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பாலாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.ராஜேந்திரன், தங்கப்பன், கனகவல்லி மண்டல துணைத்தலைவர்கள் உமா,கலாராணி, ரமேஷ் மாவட்ட பொறுப்பாளர்கள் வினு, பாலமுருகன், விஜயன் மற்றும் அதிமுக நகர அவைத்தலைவர் சுடர் பாலு, மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நரசப்பன், நிர்வாகிகள் சாய் கிருஷ்ணன், லோகேஷ் மற்றும் அனைவருக்கும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0