9 மாத கைகுழந்தையுடன் வட மாநில பெண் திடீர் மாயம்

கோவை செப்டம்பர் 18மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் உலாசிங். இவரது மனைவி மாதுரி ( வயது 26) இவர்களுக்கு 9 மாத பெண்குழந்தை உள்ளது.இவர்கள் பொள்ளாச்சிரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலத்தின் அடியில்வசித்து வருகிறார்கள்.கடந்த 12 ‘ஆம் தேதி மாதூரி தனது 9 மாத பெண்குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரிடம் டவுன்ஹால் வரை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றாராம் .பிறகு திரும்ப வில்லை எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது கணவர் உலாசிங் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் கன்னையன் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.