8வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானவருக்கு 20 வருட சிறை தண்டனை – அபராதம்

கோவை செப்டம்பர் 19கோவை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் அதே பகுதி சேர்ந்த குப்புசாமி (வயது 62) என்பவரைகைது செய்தனர்.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்றுநேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, எதிரி குப்புசாமிக்கு 20வருட சிறைதண்டனையும் மற்றும் ரூ 42 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர்உஷா மற்றும் பெண் காவலர் பவித்ரா ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், வெகுவாக பாராட்டினார்.