காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்னின் பெற்றோர் உட்பட 4 பேர் கைது

கோவை செப்டம்பர் 20 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனியாண்டி புதூரை சேர்ந்தவர் பவிபிரியா ( வயது 26) இவர்கொண்டே கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரை காதலித்து வந்தார் .அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . இதனால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பவிபிரியாவுக்கு வேறு நபரை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர் .இதை அறிந்த பவி பிரியா தனது காதலன் சேதுபதியை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பவி பிரியா தனது காதல் கணவருடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் நான் எம்.சி.ஏ. படித்துள்ளேன். கொண்டேகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தேன்.. நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் . எங்களது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் வேறு ஒரு நபருடன் எனக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து செய்தனர். இதனால் நான் சேதுபதியை திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு எனது பெற்றோர் எங்களுக்கு தொடர்ந்து மீரட்டல் விடுத்து வந்தனர். கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். இதற்கு ஆதரவாக எனது உறவினர்களும் உள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது இதை யடுத்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண்ணின் தந்தை முருகேசன் (வயது 65),தாய் செல்லம்மாள் ( வயது 55), சகோதரர் மணிவாசகம் (வயது 22 )உறவினர் முருகானந்தம் ( வயது 45) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.