கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

கோவை செப்டம்பர் 20 கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் என்ற ஜாக் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர்அந்த பகுதியில்அறை எடுத்து தங்கி இருக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த கஞ்சாவை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முஜுபூர் ரகுமான் ( வயது 27 )என்பவரை தேடி வருகிறார்கள்.