ரயில் பாதையில் காப்பர் கேபிள் திருடிய 4 பேர் கைது

கோவை செப்டம்பர் 23.கோவை ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே காப்பர் கேபிள் திருட்டு போனது.இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்) வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.இதில் அந்த கேபிள் வயரை திருடியது யார்? என்பது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ராமச்சந்திரன் (42)கணபதி சதாசிவம் ( வயது 46) சரவணம்பட்டி நேதாஜி நகர் குமார் (வயது 49) கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இவரிடமிருந்து காப்ப கேபிள் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3,500 இருக்கும். 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.