திருமணமாகாமல் பெற்றெடுத்ததால் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற தாய் – கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு !!!

திருமணமாகாமல் பெற்றெடுத்ததால் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டுச் சென்ற தாய் – கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு !!!

திருமணம் ஆகாமல் பெற்றெடுத்ததால், பச்சிளம் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் தாய் தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்தார். பிரசவ வேதனையில் இருந்த அவர் பெயர் சூர்யா என்றும், அங்கு உள்ள மருத்துவர்களிடம் தெரிவித்தார். ஆனால் உறவினர்கள் குறித்து விவரத்தை சரிவர சொல்ல முடியாமல், பிரசவ வலியால் துடித்தார். இதனால் உடனடியாக செவிலியர்கள் உதவியுடன் மருத்துவர்கள் அவரை பிரசவ அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சூர்யா பிரசவ பாட்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அருகே குழந்தை படுக்க வைக்கப்பட்டு இருந்தது. அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவரது கணவர் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். அதற்கு அவர் சரிவர பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அந்தப் பெண் குழந்தை அழுது கொண்டு இருந்தது. ஆனால் அங்கு அந்த பெண் இல்லை.

இதுகுறித்து அருகே இருந்த மற்ற பெண்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்த பிறகு வார்டுகளில் தேடியும் அந்தப் பெண்ணே கண்டுபிடிக்க முடியவில்லை, அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது மருத்துவமனையில் போலியான முகவரியை கொடுத்து இருந்தது தெரியவந்தது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் துறையில் புகார் அளித்தனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தினர்.

அதில் திருமணமாகாமல் காதலன் மூலம் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் பிரசவித்து விட்டு அந்த பெண் தலைமறைவாகிய உள்ளது தெரிய வந்தது. ஆனால் அவர் எங்கு ? சென்றார் என்பது, தெரியவில்லை இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு இடையே தாய் இல்லாமல் தவித்த அந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு அங்கு உள்ள பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கோவை மருத்துவமனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.