கோவை செப்டம்பர் 25.கோவை ஒண்டிபுதூர், மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜன் ( வயது 75 )இவர் ஒண்டிப்புதூர் பகுதியில் இருந்து காந்திபுரத்திற்கு அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். பஸ்சை கோவையை சேர்ந்த கருப்பசாமி என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சிங்காநல்லூரில் இருந்து காமராஜர் ரோடு வழியாக பீளமேடு ஹோப்காலேஜ் அருகே வரும்போது சாலையில் உள்ள வளைவில் பஸ் திரும்பிய போது தானியங்கி கதவு தானாக திறந்தது. அப்போது படிக்கட்டில் இறங்குவதற்காக காத்திருந்த ராஜன் ஓடும் பஸ்சிலிருந்துகீழே விழுந்தார் .அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது ..அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ராஜன் இறந்தார் .இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





