கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.கோவை செப்டம்பர் 26 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் ( வயது 35) இவரது சகோதரிகள் மீனாட்சி ( வயது 36 )முத்துலட்சுமி ( வயது 46)இவர்கள் 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள பி.கே.எஸ். காலனியில் ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3பேரும் விஷம் குடித்து வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது .தொடர்ந்து அவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.அதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் 3 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு பகுதி போலீசாருக்குதகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முத்துகிருஷ்ணன் சமையல் வேலைக்கு சென்று வந்ததாகவும், மீனாட்சி தீப்பெட்டி கம்பெனிக்கும், முத்துலட்சுமி சமோசா தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே 3 பேரும் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதை அதிக வட்டிக்கு கடனாக கொடுத்து வந்ததார்கள்.மேலும் சீட்டும் நடத்தி வந்தார்களாம். தொடர்ந்து அவர்கள் கடனாக கொடுத்த பணம் வசூல் ஆகவில்லை. இதனால் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனம் உடைந்து சொந்த ஊரில் இருந்து குடும்பத்துடன் 3 பேரும் வெளியேறி தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்,அங்கு இருக்க அவர்களுக்கு விருப்பமில்லை.இதனால் அங்கிருந்து ஏதாவது வேலை செய்து குடும்பத்தை நடத்தலாம் என்று எண்ணத்தில் பொள்ளாச்சிக்கு கடந்து 2 நாட்கள் முன்பு வந்து வாடகை வீட்டில் குடி ஏறினார்கள்.வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால்வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று 3 பேரும் திப் பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட பொட்டாசியம் கலந்த வேதிப்பொருட்களை தண்ணீரில் கரைத்து குடித்துதற்கொலைக்கு முயன்றததாக விசாரணையில் தெரியவந்தது. 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.