அரசு பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் .கண்டக்டர் கைது

கோவை செப்டம்பர் 26 நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து நேற்று முன் தினம் பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பயணிகளுடன் அரசு பஸ் கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதில் வந்த மாணவி ஒருவர் பள்ளிக்குச் சென்றதும் தனது ஆசிரியரிடம் அரசு பஸ் கண்டக்டர் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசுபஸ் கண்டக்டர் அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது .இதை படுத்து ஊட்டி நஞ்சநாடு பகுதியை சேர்ந்த கண்டக்டர் ஆனந்த் குமார் கைது செய்யப்பட்டார் .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.