போதையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

கோவை செப்டம்பர்26 கோவை துடியலூர் என். ஜி ஜி. ஒ காலனி, ஸ்ரீ வாரிகார்டனை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் சூர்யா ( வயது 20 கஞ்சா – போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையானவர்.இந்த நிலையில் போதையில் நேற்றுஅவரது வீட்டில் மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லலிதா துடியலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் குரு கணேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.