கோவை செப்டம்பர் 27 கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண் .இவர் தடாகம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் துஷாந்த் ராஜ், பிரசன்னா ஆகியோருடன் சாய்பாபா காலனி என் எஸ்.ஆர்.ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் நின்றிருந்த ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண்ணை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்தாராம் இதைப் பார்த்த இளம் பெண்ணின் நண்பர் துஷாந்த் ராஜ் அந்த நபரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அந்த நபர் திடீரென இளம்பெண்ணை தாக்கினார். இதை அறிந்த அந்த இளம் பெண் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண்ணை செல்போனில் புகைப்படம் எடுத்து தாக்கியவர் குனியமுத்தூர் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் அருண் பரத் (வயது 41) என்பது தெரிய வந்தது .போலீசார் அவரை கைது செய்தனர் .அது போன்று அருண் பரத் தன்னை துஷாந்த்ராஜ் தாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளார் .அதன் பெயரில் துஷாந்த் ராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





