தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை செப்டம்பர்30 உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு அரசாணைப்படி ரூ. 14,892 ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு எஸ். டி.யு.சி.மாநில துணைத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தூய்மை பணியாளர்கள் 2 ஆண்டுகள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பு ஊதியம், தனியார் மயம் உள்ளிட்டவற்றை அரசு கைவிட வேண்டும் .தூய்மை பணி, கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்டவை எந்திரமயமாக வேண்டும் கையுறை, காலனி உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள், மருத்துவ பாதுகாப்பு, ஓய்வுறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், தூய்மை பணியாளர் குடிநீர் பம்ப் இயக்குபவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.