கோவை அக்டோபர் 6 கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 8 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான நூலகம் அறிவியல் மையத்தில் ஒரு பெரிய வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம் விண்வெளி அரங்கம் கலையரங்கம், குழந்தைகள் உலகம் மாற்றுத்திறனாளிகள் உலகம் ,தமிழ் புத்தக பிரிவு, பருவ இதழ்கள் போட்டி தேர்வுக்கான நூலகம் ,டிஜிட்டல் நூலகம், இன்குபேஷன் சென்டர் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. இந்த நூலக கட்டுமான பணிகளை விரைந்து முடித்து அடுத்த ஆண்டு 20 26 ஜனவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அடிக்கல் நாட்டும்போதே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நூலகம் கட்டும் பணி நடைபெற்று வரும் இடத்தின் அருகே காட்டூர் காவல் நிலையம் உள்ளது. அதை இடித்து அகற்றிவிட்டு அங்கு நூலகத்திற்கு நுழைய வாயில் அமைக்கப்படுகிறது. இதற்கிடையே அங்கு செயல்பட்டு வந்த காட்டூர் காவல் நிலையம் ராம்நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல உதவி கமிஷனர் அலுவலகமும் இடமாற்றம் செய்யப்பட்டது காட்டூர் காவல் நிலையகட்டிடத்தை இடித்து அகற்றும் பணி கடந்து சில நாட்களாக நடந்து வருகிறது. அந்த கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு இடிபாடுகள் அகற்றப்படுகிறது. அதன் பின்னர் அந்த இடத்தில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான நுழைவாயில் கட்டும் பணி தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை என தெரிவித்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது காட்டூர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக ராம்நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தில் ரூ 10 கோடி செலவில் போலீஸ் நிலையத்துக்கான புதிய கட்டிடம் கட்டும்பணிவிரைவில் தொடங்கப்படும் என்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





