வீட்டில் வைத்து லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த 4பேர் கைது

கோவை அக்டோபர் 8 கோவை குனியமுத்தூர், அன்னமநாயக்கர் வீதியில் , இ.பி. அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாககுனியமுத்தூர் போலீசுக்கு ரகசியதகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் மருதாம்பாள் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை வீதியை சேர்ந்த செந்தில்குமார் ( வயது 37) சுண்டக்கா முத்தூர் தங்கராஜ் (வயது 46) குறிச்சி ஹவுசிங் யூனிட் மாயக்கண்ணன் ( வயது42 )சுந்தராபுரம் முருகா நகர் ராம்குமார் (வயது 37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.,அங்கிருந்த லாட்டரி டிக்கெட்டுகள் ,4 செல்போன், பணம் ரூ 4,800, பில் புக், டைரிஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர்.