தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள்
“2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது அவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அளவிலான பளு தூக்கும் போட்டியில் சூலூர் ஸ்ரீ ஜெயமாருதி தேகப்பயிற்சி சாலையில் பயிற்சி பெற்று வரும் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் ஸ்ரீ ரஞ்சன் முதலாமிடம் பிடித்து ரூபாய் 1,00,000 பண வெகுமதியும் மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் மூன்றாம் இடம் பிடித்து ரூபாய் 50,000 பண வெகுமதியும் மற்றும் வெற்றி பதக்கங்களை மாண்பு மிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வழங்கி சிறப்பித்தார் இவளுடன் சிறப்பு பயிற்சியாளராக கப்பல் படை வீரர் சூலூர் பாஸ்கர் மற்றும் காவல்துறைசதீஷ் உடன் சென்று மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர் வெற்றி பெற்ற வீரர்களை சூலூர் ஸ்ரீ ஜெயமாருதி தேகப்பயிற்சிசாலையின் கௌரவத் தலைவர் த.மன்னவன், சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவி மன்னவன், பயிற்சி சாலையின் தலைவர் பொன்.கந்தசாமி தமிவ, கோவை மாவட்ட பளு தூக்கும் சங்கத் தலைவர் சிவகுமார், கபடி கணேசன், எஸ்பிஎஸ் ஜுவல்லரி கண்ணன், புதூரார் தங்கவேல்,
தண்டபாணி,சண்முகசுவாமி மற்றும் ஸ்ரீ ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





