கோவை மத்திய சிறைக்கு கத்தியுடன் வந்தவர் கைது

கோவை அக்டோபர் 15 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர.இவர்களை குடும்பத்தினர் – உறவினர் பார்ப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கபடுகிறார்கள்..இந்த நிலையில் மதுரை ,மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த அய்யனார் என்பவர்தனது தம்பி பாலா என்ற மதுரை பாலாவை பார்ப்பதற்கு நேற்றுமத்திய சிறைக்கு வந்தார். அப்போது சிறை வளாகத்தில் அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர் .அப்போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டுக்குள்ஒரு அடி நீள கத்திமறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.