கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவி திடீர் மாயம்

கோவை அக்டோபர்16 திருச்சி வயலூர் ரோடு ,குமரன் நகரை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் லட்சிமித்ரா (வயது 20).இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார் ,இது குறித்து அவரது தந்தை நேரு குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.