கோவை அக்டோபர் 23 கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் சார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளது. இங்கிருந்து தினமும் சராசரி 30 முதல் 33 விமானங்கள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களில் உள்நாடு மற்றும் வெளிநாடு பிரிவுகளில் 130 விமானங்கள் இயக்கப்பட்டன .இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- முன்பு பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது.. தீபாவளி முன்னிட்டு கடந்த 17-ந்தேதி முதல் 20 – ந் தேதி வரை 4 நாட்கள் விமானங்கள் இயக்கம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன்படி 17-ந்தேதி முதல் 20 – ந் தேதி வரை 4 நாட்கள் விமானங்கள் இயக்கம் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதன்படி 17 – ந் தேதி 32 விமானங்கள் இயக்கப்பட்டன .இதில் உள்நாட்டு பிரிவில் 9, 959 பேர் ,வெளிநாட்டு பிரிவில் 461 பேர் என மொத்தம் 10,420 பேர் பயணித்தனர் 18, 19 – ந் தேதி களில் மொத்தம் 60க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன. அவற்றில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணித்தனர் தீபாவளி தினத்தன்று 31 விமானங்கள் இயக்கப்பட்டன இதில் மொத்தம் 6, 341 பேர் பயணித்தனர். அந்த வகையில் 4 நாட்களில் இயக்கப்பட்ட 130விமானங்களில் 36 ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் பயணம் செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





