தீபாவளியை சுவீட்கடைகளில் திடீர் ஆய்வு!!

கோவை அக்டோபர் 23 தீபாவளியை யொட்டி கடைகளில் விதவிதமான இனிப்பு கார வகைகள் விற்பனை செய்யப்பட்டன இந்த நிலையில் மாவட்டம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள சுவீட் கடைகளில் உணவு வகைகளில் தடை செய்யப்பட்ட நிறமி சேர்க்கப்பட்டுள்ளதா? தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? கடைகள் சுகாதாரமாக உள்ளதா? என கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்தனர் இதில் சுகாதாரமற்ற முறையில் கடையை வைத்திருந்த 5 கடைகளில் உரிமையாளர்களுக்கு தலா ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது. – கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 487 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 74 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை 2 வாரத்திற்குள் கிடைக்கும் .அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் விதி மீறல் சம்பந்தமாக 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சுகாதாரமற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்