டாஸ்மாக் கடையில் செல்போன் பறித்தவர் கைது

கோவை அக்டோபர் 23 கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகரைசேர்ந்தவர் பெரியசாமி ( வயது 54) இவர் தீபாவளி தினத்தன்று சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி திடீரென்று இவரது சட்டை பையில் இருந்து செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து பெரியசாமி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார்வழக்கு பதிவு செய்து ரத்தினபுரி புதுப்பாலம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 38 )என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.