ஓரினச்சேர்க்கை தகராறில் நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை.

கோவை இடிகரைபக்கம் உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 48). கோவை எருக்கம்பெனி பிரபு நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40. ) இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சண்முகமும், பிரகாஷ்சும் நண்பர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில், கடந்த 18.1.2022 – இல் பிரகாஷை அவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் சண்முகத்துக்கும் பிரகாஷ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் சண்முகத்தை கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில்சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மாவட்ட கூடுதல் முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை நேற்று ( வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர். சிவராமகிருஷ்ணன் ஆஜரானார்.