கோவை அக்டோபர் 25 கோவை சுக்கிரவார்பேட்டையில் உள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 63 -வது ஆண்டு கந்தசஷ்டி விழாநடைபெற்று வருகிறது இதன் 4-வது நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுதுளி அமைப்பின் சேர்மன் வனிதா மோகன், கோவை நகர அமைப்புக்குழு தலைவரும் கவுன்சிலருமான சந்தோஷ் என்கிற சோமு,,ஆர் .பி. கருணாகரன் ஆகியோர்கலந்து கொண்டனர்.இவர்களுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன்,அறங்காவலர்கள் மகேஸ்வரன், விஜயலட்சுமி,ராஜா,கோவில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம்,கணக்கர் முத்துக்குமார் மகேஸ்வரி ஆகியோர்பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.முருகனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.விருக்சம் பஜனை மண்டலிபஜனைகுழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலையில் சங்கு அபிஷேகம் நடைபெற்றது.வருகிற 27- ந் தேதிமாலையில் சூரசம்காரம் நிகழ்ச்சியும், 28 – ந் தேதிமாலை 4:30 மணிக்குதிருக்கல்யாணம் நிகழ்ச்சியில் நடக்கிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





