கோவை அக்டோபர் 27 சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நடராஜன் ( வயது 61) இவர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள் உங்களின் வங்கி கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே உங்கள் டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நடராஜன் என் மீது தவறிவில்லை என்று கூறி மறுத்தார். ஆனாலும் அந்த மர்ம ஆசாமிகள் உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் தனியார் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள். அதை சரி பார்த்துவிட்டு பணத்தை திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அந்த அதிகாரி உடனே வங்கியில் இருந்து ஓய்வு பெற்றபோது வாங்கிய ரூ 29 லட்சத்து 88 ஆயிரத்தைஅவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார் .அந்த பணத்தை திருப்பி அனுப்பாததால் சந்தேகம் அடைந்த அதிகாரி உடனே தனக்கு வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது வந்து செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு தெரியவந்தது. இதனால் மரம ஆசாமிகள் தன்னை மோசடி செய்ததை உணர்ந்த நடராஜன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் நடத்திய விசாரணையில் நடராஜனிடம் டிஜிட்டல் கைது என்று கூறி பண மோசடியில் ஈடுபட்டது கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரமீஸ், ஹாரிஸ், நபில் என்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் மோசடி செய்த பணத்தில் ரூ.6 லட்சத்தை காசோலை மூலம் எடுத்த போது போலீசில் சிக்கினர். கைதான 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான மோசடிஆசாமிகள் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடி செய்து உள்ளார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





