விஷம் வைத்து தெரு நாய் கொலை. போலீசில் புகார்

கோவை அக் 27 கோவை பீளமேடு அருகே உள்ள மசக்காளி பாளையம், மேத்தா லே அவுட்டில் தெரு நாய் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது. இது குறித்து மிருக வதை தடுப்பு அமைப்பு உறுப்பினர் மீனாட்சி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.