வீட்டில் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு

கோவை அக் 27 கோவை சின்னவேடம்பட்டி, கந்தசாமி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 49). நேற்று முன்தினம் இவர் வீட்டை பூட்டிவிட்டு மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின், ரு 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காண வில்லை. யாரோ முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடி சென்று விட்டனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.