அசூர வேகத்தில்பஸ் ஓட்டிய தனியார் பஸ் டிரைவர் -கண்டக்டர் கைது.

கோவை அக் 28 கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பஸ் அசூர வேகத்தில் வந்தது.இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் (வயது 21)கண்டக்டர் ஜீவா (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் .இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.