போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாதிரி தேர்வு

கோவை அக் 29தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் ,சிறை காவலர், மற்றும் தீயணைப்பு படையினர் என 3,665பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு 9- 11-20 25அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்று வரும் மாணவ – மாணவிகளுக்கு இலவச மாதிரி தேர்வுகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் 1 – 11 – 2025மற்றும் 2 -11-2025ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதிரி தேர்வு முடிந்த அன்றே தேர்வுக்கான விடை குறிப்புகள் மற்றும் மதிப்பெண் விவரங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த மாதிரி தேர்வில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்