Dating app மூலம் இளம் பெண்ணை ஏமாற்றிய DSP மகன்.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண் . இவர் கோவையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த தருண் ( வயது 27 ) என்பவருக்கும் செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தருண் அந்த இளம்பெண்ணிடம் நேரில் சந்தித்து பேசலாமா ? என்று கேட்டார். அதற்கு அவர் சம்மதித்ததால் கடந்த 2-ஆம் தேதி இரவு இரண்டு பேரும் சந்தித்தனர் .பின்னர் இளம் பெண்ணை தருண் தனது காரில் ஏற்றிக்கொண்டு நவக்கரைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் தருணுடன் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் “கூகுல் பே ” மூலம் ரூ.90 ஆயிரத்தை பறித்தனர். அவர்கள் காரில் தப்பி செல்ல முயற்சித்த போது அந்த இளம்பெண் அவர்களிடம் இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது இனி விடுதிக்கு செல்ல முடியாது.தன்னை பாதுகாப்பான இடத்தில் விட்டு செல்லுமாறு கெஞ்சினார். இதை யடுத்து அவரை கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துவிட்டு தருண் தப்பி சென்றார்.இது குறித்த புகாரின் பேரில்ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்று மிரட்டி நகை -பணம் பறித்த தருண் திண்டுக்கல்லில் தற்போது டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் தங்கபாண்டி என்பவரின் மகன் என தெரியவந்தது. இதை யடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அதிரடியாக தருணை நேற்று கைது செய்தனர். அத்துடன் அவருடன் வந்தவர் யார்? என தெரியவில்லை .அவர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவருக்கும் தருணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.