கோவை சின்னியம்பாளையம், கிருஷ்ண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி இந்திராணி ( வயது 73 ) இவர் நேற்று மலுமிச்சம்பட்டியில் இருந்து அரசு பஸ்சில் கோவை டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உங்கள் செயின் கொக்கி உடைந்து உள்ளது. கீழே விழுந்து விடும். கழட்டி பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பிய மூதாட்டி இந்திராணி செயினை கழட்டி அந்தப் பெண்ணின் உதவியுடன் பர்சுக்குள் போட்டார்.. பஸ்சை விட்டு இறங்கி பர்சை பார்த்த போது அதிலிருந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை.. பஸ்சில் பயணம் செய்த அந்த பெண் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி இந்த செயினை திருடி சென்று விட்டார். இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் இந்திராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி விஜயா ( வயது 63 )இவர் நேற்று ஆனைகட்டி பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று விட்டு பஸ்சில் வீடு திரும்பினார். சீரநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கிய போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர் . இதுகுறித்து மூதாட்டி விஜயா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்துள்ளார். சப் .இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,









