நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை ஆட்சியர் ஆஜர்.

தாசில்தார் பதவி உயர்வு விவகாரம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோவை ஆட்சியர் ஆஜர் – முன்னாள் கலெக்டருடன் மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு !!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் தற்பொழுது ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி கடந்த 2029 – 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற வருவாய் உதவியாளராக கோவையில் பணியில் சேர்ந்த உமாபதி, நாட்ராயன் ஆகியோர் துணை தாசில்தாராக 2018 ஆம் ஆண்டும் சிறப்பு தாசில்தாராக 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றார்.

தமிழ்நாடு அரசு பிறப்பித்த சுற்றறிக்கையின் அடிப்படையில் மீண்டும் துணை தாசில்தாராக இவர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அரசிடம் முறையிடப்பட்டது. அதே நேரம் உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இடையில் முதலில் பிறப்பித்த சுற்றறிக்கை அரசு திரும்பி பெறப்பட்டது. இதை அடுத்து தங்களுக்கு மீண்டும் தாசில்தார் பதவி உயர்வு வழங்க கோரி நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். இதன்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் கோவை மாவட்டத்தில் தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றம் கோவை கலெக்டருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இருவரும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே இளந்திரையன், கோவை கலெக்டரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். அவர் ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமின்னில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கோவை கலெக்டர் பவன்குமார் நேரில் ஆஜரானார்.

அப்பொழுது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, கோவை கலெக்டராக கடந்த பிப்ரவரி மாதம் தான் பவன் குமார் பதவியேற்றார். இந்த உச்சநீதிமன்ற உத்தரவின் போது கோவை ஆட்சியராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிராந்தி குமார் தான் பதவி வகித்தார். என்றும் இதை ஏற்றுக் கொண்டு நீதிபதி இந்த வழக்கை வருகிற 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று கோவை மாவட்டம் முன்னாள் கலெக்டர் கிராந்தி குமார், தற்போதைய கலெக்டர் பவன் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மனுதாரர் வழக்கறிஞர் கங்கை அமரன் ஆஜரானார்.