விவாகரத்து தர மறுத்த மனைவி, ஓட்டுநரை வைத்து கொலை : கோவையில் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரான கணவர் கைது – ஓட்டுநர் அளித்த அதிர்ச்சியை வாக்குமூலத்தில் நடவடிக்கை எடுத்த காவல்துறை !!!
கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி (46). இவர்களது வீட்டில் 15 வருடங்களாக கார் ஓட்டுநராக பணி புரிந்து வருபவர் சுரேஷ்.கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மகேஸ்வரியை சுரேஷ் கொலை செய்து விட்டு வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனை அடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுரேஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த பொழுது கவி சரவணன் அவரது மனைவி மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்ததால் கொன்று விடுமாறும் மேலும் வழக்கு செலவையும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேம்பரை சேர்ந்தவர் தருவதாக ஆசை வார்த்தை கூறியதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.
சுரேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் கவி சரவணக்குமாரையும் கைது செய்து இந்த வழக்கில் இரண்டாவது கொலை குற்றவாளியாக சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.கோவையில் விவாகரத்து தர மறுத்த மனைவியை கார் ஓட்டுனரை வைத்து அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.









