மக்களவைத் தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், நெல்லை அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. “எங்க தொகுதி எம்.பி ராபர்ட் புரூஸை கண்டா வர சொல்லுங்க” என்ற வாசகத்துடன் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில், நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு பெட்டியை தள்ளி கொண்டு செல்வது போலவும், “வெயில் கொஞ்சமும் குறையட்டும் வாரேன்!” என்று கிண்டலாக கூறுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், “கன்னியாகுமரியிலிருந்து நெல்லை பாராளுமன்ற தொகுதி பக்கம் கையோடு கூட்டிட்டு வாருங்க” என்ற வாசகம், அவர் தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில், அதிக கவனம் செலுத்துவதாகவும், நெல்லை தொகுதியை புறக்கணிப்பதாகவும், மறைமுகமாக குற்றம்சாட்டுகிறது..
பாஜகவின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி கிளை அமைப்பாளர் செல்வகுமார் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் படங்களும் இடம் பெற்றுள்ளன.









