பிரதமர் மோடி கோவை வருகை!

கோவை, கொடிசியாவில் நடக்கும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி வருகிற 19 ஆம் தேதி கோவை வருகிறார். இதற்காக அன்று பிற்பகல் 12:30 மணிக்கு, ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு ,பிற்பகல் 1:25 மணிக்கு கோவை வருகிறார். 1:30 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்து, 1:40 மணிக்கு குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு கொடிசியா அரங்கிற்கு செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்டு பின்னர் மாலை 3:15 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்டு 3:30 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அவர் அங்கு இருந்து புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார்.