துபாய் விமான சாகசம்!சூலூர் விமானப்படை கமாண்டர் பலி!

துபாயில் தேஜஸ் விமானம் விழுந்து விமானி உயிரிழப்பு : விமானப்படை வீரருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அஞ்சலி !

கோவை சூலூரில் இருந்து துபாய் சென்று, சாகசம் செய்த தேஜாஸ் விமானம் தீப்பிடித்து விமானி உயிரிழந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.

துபாய் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் விமான கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது .
இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானத்தின் விமானி 37 வயது நமன்ஸ் சியால் பறந்து சென்று சாகசம் செய்த விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எறிந்தது. இதில் விமானி நமன்ஸ் சியால் பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சூலூர் விமானப்படை தளத்தில் நமன்ஸ் சியால் குட் மார்னிங் கமாண்டராக பணியாற்றி வந்தார். விபத்து நடந்த விமானத்தை கண்காட்சியில் இடம்பெறுவதற்காக கோவையில் இருந்து துபாய் வரை அவர் இயக்கியதாக தெரிகிறது. அவரது உயிரிழப்பால் சூலூர் விமானப்படை தளம் சோகமயமாக காட்சி அளிக்கிறது.

சூலூர் விமானப்படை குடியிருப்பில் நமன்ஸ் சியால் தனது மனைவி மற்றும் ஏழு வயது குழந்தையுடன் வசித்து வந்தார். அவருடைய மனைவியும் விமானப்படை அதிகாரி தான். தற்பொழுது விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு படித்து வருகிறார். 7 வயது பெண் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள்.

சூலூர் விமானப்படைத்தளத்தில் நமன்ஸ் சியால் உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான இமாச்சலப்பிரேதசத்திற்கு விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.