கோவையின் வளர்ச்சியை தடுக்கும் தமிழக முதல்வரை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞரணியினர் கைது செய்யப்பட்டனர்.
கோவைக்கு வர இருந்த மெட்ரோ ரயிலுக்கு, உரிய ஆவணங்களை கொடுக்காத தமிழக அரசை கண்டித்து, பாஜக இளைஞரணியினர் காந்திபுரம் பகுதியில், கோவை வருகை தரும் தமிழக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்டாலினை திரும்பி போகச்சொல்லி கோசங்களை எழுப்பினர் . செய்தியாளர்களிடம் மாநில இளைஞரணி துணைத்தலைவர் கிருஷ்ணபிரசாத் பேசும்போது,

கோவையின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக கோவைக்கு வர வேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்திற்கு , தமிழக அரசு டிபி ஆரை ஒழுங்காக வழங்கவில்லை. திமுக ஆட்சியில் கோவையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதை கண்டித்தும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்கப்படுவதை, வேடிக்கை பார்க்கும், தமிழக அரசை கண்டித்து பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி வருகையை கண்டித்து உருவபொம்மையை எரித்து , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உரிய அனுமதி கேட்டும், காவல் துறை கொடுக்கவில்லை என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.









