கஞ்சா சாக்லேட் விற்பனை – இளம்பெண் கைது.!!

கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி ,சிறப்பு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தடாகம் ரோடு ,பால் கம்பெனி பக்கம் உள்ள முத்து மாரியம்மன் கோவில் வீதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பெண்ணிடமிருந்து 29 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சத்தியமங்கலம், வடக்குப்பேட்டையை சேர்ந்த வெள்ளியங்கிரி மகள் அர்ச்சனா பிரியா ( வயது 25) என்பது தெரிய வந்தது. தற்போது ஆர். எஸ். புரம் , பால் கம்பெனி ரோட்டில் வசித்து வருகிறார். தப்பி ஓடியவர் மயிலாடுதுறையை சேர்ந்த கிஷோர் என்பது தெரிய வந்தது அவரை தேடி வருகிறார்கள்.