கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள அரசம்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி ( வயது 29) கட்டிட தொழிலாளி இவரது மனைவி கல்பனா (வயது 25) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கருப்புசாமி குடிப்பழக்கம்உடையவர். சரிவர வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு 2 குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார் .அத்துடன் அரசம்பாளையம்பிரிவில் உள்ள தனியார் அட்டை கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் கல்பனா வீட்டிலிருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்புசாமி அவரை வழிமறித்து தன்னுடன் குடும்பம்நடத்த வருமாறு அழைத்தார். அதற்குஅவர் மறுத்தார் .அதனால் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கல்பனாவின் கழுத்து முகம் ஆகிய இடங்களில் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.படுகாயம் அடைந்த கல்பனாவை அந்த வழியாக வந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர் .அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துகிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியைநேற்று இர வு கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





