கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார் .அவர் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த வட மாநில வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர் .அவர்கள் சாமநாயக்கன்பாளையத்துக்கு வந்து ஒரு தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி தான் வசித்து வந்த வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை .இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..








