ஸ்ரீ ஐயப்பசாமி கோவிலில் பூகுண்டம் திருவிழா..!

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குப்பட்ட சாந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பசாமி கோவிலில் நேற்று இரவு நடைபெற்ற பூகுண்டம் திருவிழா நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி D வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து ரூபாய் 10,000 நன்கொடையாக வழங்கினார். உடன் கேத்தி பேரூராட்சி கழகச் செயலாளர் ஜெய் என்ற ராதாகிருஷ்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் போஜன், பேரூராட்சி கழகத்தின் அவைத்தலைவர் சுதேவன், பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் செந்தில் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் இதில் விரதமிருந்த 100- க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூ குண்டம் இறங்கினர்..