தேசிய அளவிலான பள்ளி நீச்சல் போட்டி.!!

இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் கழகம் (எஸ்.ஜி. எப்.ஐ) சார்பில் தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், கோவை மாணவி எம்.சுஹிதா வெண்கலப் பதக்கம் வென்று கோவைக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய விளையாட்டு விழா இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் 69-வது தேசிய பள்ளி விளையாட்டு விழா (2025–26) தில்லியில் சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
வெண்கலப் பதக்கம் வென்ற சுஹிதா இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 100 மீட்டர் ‘பேக் ஸ்டோக்’ பிரிவில் கோவை இந்துஸ்தான் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி சுஹிதா M கலந்து கொண்டார். நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர்,வந்திருந்தனர் கடுமையான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து சிறப்பான வேகத்தை வெளிப்படுத்திய அவர், மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவி சுஹிதா வை பாராட்டும் வகையில் பள்ளியில் பராட்டு விழா நடந்தது. சுஹிதா வின் இந்த வெற்றி குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், “மாணவியின் விடாமுயற்சியும், முறையான பயிற்சியுமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம். தேசிய அளவில் பதக்கம் வென்று பள்ளிக்கும் கோவை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள சுஹிதா வருங்காலத்தில் சர்வதேச போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என வாழ்த்தினர்.

மாணவியின் இந்த சாதனைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.