கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில், 4000 மாடுகளுக்கு மேல் விற்பனை நடந்துள்ளது. 6 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கிவரும் பொள்ளாச்சி மாட்டுச்சந்தை, வாரம்தோறும் செவ்வாய், வியாழன் என இரண்டு தினங்களில் நடைபெற்று வருகிறது.
இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வாரம் தோறும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு வர உள்ளதை முன்னிட்டு, செவ்வாய் கிழமை, பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வழக்கத்தை விட சுமார் 4000.க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
மேலும் அதிக அளவில் கேரளா மாநில வியாபாரிகள் மாடுகளை வாங்கிச் சென்றனர். இதன் மூலம் வழக்கத்தை விட 6 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.









