20வது முறையாக கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன் தினமும் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று 20-வது முறையாக மீண்டும் இ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக இ -மெயிலுக்கு இந்த மிரட்டல் வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலகம் விரைந்தனர் .அவர்கள் மெட்டல் டிடெக்டர்கருவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும் சோதனை செய்தனர். அதில் எந்த இடத்திலும் வெடிகுண்டு எதுவும் இல்லை .அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.கலெக்டர் அலுவலகத்துக்கு இதுபோன்று மிரட்டல் விடுப்பது யார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது போன்ற மிரட்டல் கொடுத்த நபரை கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.