சென்னை: இன்று முதல் நாடு முழுக்க ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. புதிய கட்டண அமைப்பின்படி, சாதாரண வகுப்பில் 215 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
மெயில்/எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத மற்றும் ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா அதிகமாகச் செலுத்த வேண்டும். 215 கிலோமீட்டருக்கும் குறைவான தூரப் பயணங்களுக்கு கட்டண உயர்வு இல்லை. இந்த மாற்றத்தின் மூலம் நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமான ரயில்வேக்கு ₹600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்கட்டண உயர்வு மூலம் ரயில்வேக்கு சுமார் ரூ 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
நாட்டின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு நிறுவனமான இந்திய ரயில்வே, கோடிக்கணக்கான மக்களின் அன்றாடப் பயணத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. புதிய கட்டண அமைப்புப்படி, நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டணம் சற்று உயரும்.
215 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் சாதாரண வகுப்புப் பயணிகள், ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதலாகச் செலுத்த வேண்டும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கும்.
இருப்பினும், குறுகிய தூரம் பயணம் செய்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு இல்லை. 215 கிலோமீட்டர்கள் வரையிலான பயணங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஏசி அல்லாத வகுப்பில் 500 கிலோமீட்டர்கள் பயணம் செய்யும் ஒரு பயணிக்கு, மொத்தமாக ரூ 10 மட்டுமே கூடுதல் கட்டணமாகும். இந்த உயர்வு குறைவானதாகவும், சமாளிக்கக்கூடியதாகவும் உள்ளது என்று ரயில்வே விளக்கமளித்துள்ளது.
பயண சுமையையும், அதிகரித்து வரும் செலவுகளையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக ஊழியர்களின் சம்பள உயர்வு காரணமாக ஏற்பட்ட செலவை கட்டுப்படுத்த இந்த கட்டண உயர்வு உத்சவம்.
குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் குடும்பங்களைப் பாதுகாக்கும் வகையில்.. குறைந்த தூரத்திற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. புறநகர் ரயில் சேவைகள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை.
அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களால் குறைந்த தூர ரயில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டணங்களை மாற்றாமல் வைப்பதன் மூலம் தினசரிப் பயணிகளின் சுமை உயராமல் இருக்கும். நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமே 10-20 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.
இன்னொரு தனி அறிக்கையில், நாட்டின் அதிவிரைவு ரயில் திட்டம் குறித்த விஷயங்களை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. டிசம்பர் 20 அன்று வெளியிடப்பட்ட தகவலில், மகாராஷ்டிராவில் புல்லட் ரயில் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வேகம் பெற்றுள்ளதாக அமைச்சகம் கூறியது. இம்மாநிலத்தில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தக் கட்டணத் திருத்தமும், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் வேகமான முன்னேற்றமும் இந்திய ரயில்வேயை வலுப்படுத்தி, நாடு முழுவதும் பயணிகளுக்குத் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க உதவும் என அரசு நம்புகிறது. அதே சமயம் ஏழை மக்களிடையே இந்த கட்டண உயர்வு பாதிக்காத வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது..








