டாஸ்மாக் கடையில் 2 பேருக்கு பீர்பாட்டில் குத்து..!

தேனி மாவட்டம் கம்பம் பக்கம் உள்ள உத்தமபாளையம் சேர்ந்தவர் சமுத்திர பாண்டி (வயது 27 ) இவர் வடவள்ளி வி.என் ஆர். நகரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் தனது நண்பர் மாதவனுடன் வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக்கடைக்கு ( எண் 1601) மது அருந்த சென்றார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேருக்கும் இவர்களுக்கும் இடையே வாய் தகறாறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சேர்ந்து சமுத்திர பாண்டியனையும். அவரது நண்பர் மாதவரையும் பீர் பாட்டிலால் தாக்கினார்கள் . இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வருகிறார்.